எனது அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு “Secret Santa”
என்ற விளையாட்டு விளையாடினோம். அப்பொழுது எனது “Secret Santa”
வின் கோறிக்கையை ஏற்று எழுதிய கவிதை இதோ :-
கவி பாட சொன்னாய், பாடினேன்,
உன்னைப் பற்றி இல்லாவிடிலும்
உனக்காக பாடினேன்
உனது வறுத்தத்தால்
மனம் வாடினேன்
உன்னை மகிழவைக்க
இதோ ஒரு கவி எழுதினேன் !
கடவுளைப் போல் நீ இருப்பதை உணரச் செய்கிறாய்,
இருந்து கொண்டே இல்லாதது போல் இருக்கிறாய்,
தினம் ஒரு செயல் செய்யச் சொல்கிறாய்,
அனைவரையும் மனம் நெகிழ வைக்கிறாய் !
அன்புள்ள சேன்டாவே
நீ உடல் நளினம் கொண்டவளோ இல்லை
உடல் வலிமை கொண்டவனோ
நான் அறியேன்,
டிசம்பர் 23′ம் தேதி
ஆட்டம் முற்றும் பொழுது
நீ எப்பால் என்று
நான் அறிவேன் !